கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்குகிறது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

அதன்படி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 16ம் தேதி நிறைவடைந்தது. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு கடந்த 3ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியானது.இந்நிலையில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கி வரும் 27ம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.


Leave a Reply