ஆதார் நிலையத்தில் பொதுமக்களுக்கு உரிய முறையில் சேவை அளிக்கப்படவில்லை! பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் நிலையத்தில் பொதுமக்களுக்கு உரிய முறையில் சேவை அளிக்கப்படவில்லை என கூறி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தற்போது அனைத்து துறைகளிலும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் பிறந்த குழந்தை முதல் ஆதார் அட்டை எடுக்கப்பட்டு வருகிறது.

 

இதையடுத்து மாவட்டம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆதார் அட்டைக்கான சிறப்பு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதார் மையத்தில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலை முதலே காத்திருந்த புகைப்படங்கள் எடுத்து தங்கள் விவரங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதனிடையே இன்று காலை 7 மணி முதல் காத்திருந்த பொதுமக்கள் ஆதார் பதிவுக்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள் உரிய முறையில் பொதுமக்களை அணுகவில்லை எனக் கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஆதார் புகைப்படங்கள் எடுக்க இன்று போய் நாளை வா என தினந்தோறும் அலைக்கழிப்பதாகவும், மரியாதை குறைவான வார்த்தைகளை அவர்கள் உபயோகிப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.

 

மேலும்,அரசு அலுவலர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் தாமதமாகும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் காலை முதல் காத்திருந்தாலும் உரிய பதில் அளிப்பதில்லை எனவும் கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதை அடுத்து அங்கு வந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.


Leave a Reply