காதலியைப் பார்க்க 2,400 கி.மீ பயணம் செய்து போன காதலன், வேறு ஒருவருடன் காதலியை பார்த்ததால் அதிர்ச்சியில் உறைந்து போனார்.சீனாவை சேர்ந்த ஒரு இளைஞனும் ஜப்பானை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சீனாவை சேர்ந்த டி.ரேடியோசாண்டி என்பவர் தனது காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக ஜப்பானில் ஜூலை 19 ஆம் தேதி டி.ரேடியோசாண்டி 2,400 கி.மீ தூரம் பயணம் செய்து ஜப்பானுக்குச் சென்றார்.
அப்போது வணிக வளாகம் ஒன்றில் இருந்த காதலிக்கு ஆச்சர்யமளிப்பதற்காக, கரடி போன்ற உடையணிந்து அவர் முன்பு சென்றார். ஆனால் அவரின் காதலி வேறு ஒருவருடன் இருந்ததால் மனம் வெறுத்து அதிர்ச்சியில் உறைந்து போனார். அதை கண்டதும் கரடி முகமூடியை கழற்றியிருக்கிறார்.
அவரை அவருடைய காதலி பார்த்து விட்டார்.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அங்கு நடந்த சம்பவங்களை விவரிக்கும் விதமாக சில மாதிரிப் படங்களையும் பதிவிட்டிருந்தார்.