மாற்று இடம் தராமல் கடையை காலி செய்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென மீனவர்கள் வேதனை

மீன் மார்க்கெட் கட்டுமான பணிக்காக மாற்று இடம் தராமல் கடையை காலி செய்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென வியாபாரிகள் கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு.கோவை தெற்கு உக்கடம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.இந்த மீன் மார்க்கெட்டை நம்பி குளத்து மீன் விற்பவர்கள், வியாபாரிகள்,மீன் வெட்டும் தொழிலாளர்கள் என சுமார் 800 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

 

இந்த நிலையில் மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வரும் வியாபாரிகளை 7 நாட்களுக்குள் காலி செய்யக்கோரி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.மாநகராட்சி நிர்வாகம் மீன் விற்பனை செய்ய மாற்று இடம் தராமல் காலி செய்ய வலியுறுத்துவதாகவும், முறையாக வரி கட்டி வந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் இந்த மீன் மார்க்கெட்டை நம்பி குளத்து மீன் விற்பவர்கள், வியாபாரிகள்,மீன் வெட்டும் தொழிலாளர்கள் என சுமார் 800 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென கூறி அதனை கண்டித்தும், மீனவர்கள் தங்களுக்கு உரிய மாற்று இடம் கொடுத்த பிறகு மீன்மார்க்கெட்டை இடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி மேற்கொண்டனர்.

அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் மீனவர்கள் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வரும் வியாபாரிகளை 7 நாட்களுக்குள் காலி செய்யக்கோரி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதை கண்டித்து மீனவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Leave a Reply