சாதிவெறி தாக்குதல், ஆணவப் படுகொலைகளை அலட்சியப்படுத்தும் தமிழக அரசை கண்டித்து திராவிடர் விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாதி வெறி தாக்குதல், ஆணவப் படுகொலைகளை அலட்சியபடுத்தும் தமிழக அரசை கண்டித்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் ஆணவப்படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் , இவற்றை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர். பெரியார், அண்ணா பெயரை சொல்லி நடக்கும் ஆட்சியில் இது போன்று ஜாதிய தாக்குதல்கள்,ஜாதி ஆணவப்படுகொலைகள் நடப்பதாக கூறிய அவர்கள், சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றும் வரை இது போன்ற போராட்டங்கள் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


Leave a Reply