விரைவில் ரோபோட்டிக் தொழில் நுட்பத்தில் மின்விசிறி அறிமுகப்படுத்த திட்டம் – பாலிகேப் துணை பொது மேலாளர்

விரைவில் ரோபோட்டிக் தொழில் நுட்பத்தில் மின்விசிறி அறிமுகப்படுத்த உள்ளதாக கோவையில் நடைபெற்ற பாலிகேப் டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பாராட்டு விழாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவையில் பாலி கேப் நிறுவனத்தின் தமிழ்நாடு இரண்டிற்கு உட்பட்ட டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

 

விழாவில் பாலி கேப் வீட்டு உபயோகபொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கான பொது மேலாளர் ரவீந்திர ரெட்டி மற்றும் துணை பொது மேலாளர் மஞ்சுநாத் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். இதில் தமிழ்நாடு இரண்டாம் நம்பர் பிரிவுக்கு உட்பட்ட கோவை,திருப்பூர்,ஈரோடு உட்பட 19 மாவட்டங்களை சேர்ந்த பாலிகேப் வீட்டு உபயோக பொருட்களின் டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய தென்னிந்திய பொது மேலாளர் ரவீந்திர ரெட்டி கடந்த 1968 ஆம் ஆண்டு தனி நபரால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் மக்கள் அளித்த மிக பெரிய வரவேற்பை பெற்று பெரும் வளர்ச்சியடைந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் ஹோம் அப்ளையன்ஸ் துறையில் வாடிக்கையாளர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும்,குறிப்பாக மின் விசிறி தயாரிப்பில் புதிய நிறுவனங்கள் வரிசையில் பாலிகேப் மின்விசிறி விற்பனையில் தற்போது முன்னணி யில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய துணை பொது மேலாளர் மஞ்சுநாத் விரைவில் ரோபாட்டிக் தொழில் நுட்பத்தில் மின்விசிறியை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், நவீன மின் விசிறி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பில் பாலிகேப் நிறுவனம் வரும் காலங்களில் பெரும் சாதனையை ஏற்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.


Leave a Reply