நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி

கர்நாடக சட்ட பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற கூட்டணி நடந்து வந்தது. முதலமைச்சராக குமாரசாமி இருந்து வந்த நிலைகளை கூட்டணி கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்‌எல்‌ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர்.

 

இதனால் தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கடந்த 18 ஆம் தேதி குமாரசாமி தாக்கல் செய்தார். இதையடுத்து நான்கு நாட்களாக தீர்மானத்தின் மீதான விவாதம் சட்ட பேரவையில் நடைபெற்று வந்தது. அதிருப்தி எம்‌எல்‌ஏக்கள் தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கிடையே நள்ளிரவு ஆனாலும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியே ஆக வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடியூரப்பா வலியுறுத்தினார். இதனால் நேற்று இரவு 12 மணி வரை சட்ட பேரவையில் விவாதம் நடைபெற்றது.

நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தை முடிக்க வேண்டும் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் உத்தரவு இட்டு இருந்தார். இதன் படி நடைபெற்ற குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 எம்‌எல்‌ஏக்களும், பாஜகவிற்கு ஆதரவாக 105 எம்‌எல்‌ஏக்களும் ஆதரவு அளித்தனர். இதனால் குமாரசாமி ஆட்சி முடிவிற்கு வந்தது.


Leave a Reply