செரியாவின் பெல்கிரேட் நகரில் இருந்து ஜெர்மனிக்கு 130 பயணிகளுடன் விமானம் ஒன்று கிளம்பியுள்ளது. கிளம்பிய சில மணித்துளிகலே விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து போன் வந்துள்ளது.அதாவது விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு நபர் அறிவித்துள்ளார்.
அவர் கூறியதை கேட்டு விமானமானது பாதி வழியிலேயே தரையிறக்கப்பட்டது. தரை இறக்கியபின் அனைவரையும் வெளியேற்றிவிட்டு விமானம் பரிசோதனை செய்யப்பட்டது.சோதனை செய்ததில் எந்தவிதமான வெடிகுண்டும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
அதன் பிறகு தகவல் கொடுத்த நபரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த நபர் 65 வயது உடைய ஒரு முதியவர் என கண்டறிந்துள்ளனர்.அந்த முதியவரிடம் பொய்யாக தகவல் கொடுத்ததற்கான காரணத்தை விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர் கூறியதாவது: விமானத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் பெண்கள் தன்னுடன் உணவருந்த வர மறுத்த காரணத்தால் தான் இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார்.அந்த முதியவர் கூறிய காரணத்தைக் கேட்டு போலீசார் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.