சந்திராயன் 2 வெற்றிக்காக இஸ்ரோ மட்டுமல்ல , இந்தியா மட்டுமல்ல , உலகமே காத்திருந்தது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை சுமார் ரூ 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்தது.
இன்று மதியம் 2.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.பின்னர் 16 நிமிடங்களில் சந்திராயன்-2 விண்கலம் புவி வட்டப் பாதையை சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கைதட்டி , தின வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில் , சந்திராயன் 2 வெற்றிக்காக உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. சந்திராயன் 2 விண்கலம் புவியின் வட்டப் பாதையில் சென்றடைந்த முக்கியமான நாள் இஸ்ரோவுக்கு மட்டுமல்ல , இந்தியாவுக்கு மட்டுமல்ல , உலகமே சந்திராயன்-2க்காக காத்துக்கொண்டிருந்தது.
15 முக்கியமான பணிகளுக்கு அடுத்து சந்திராயனை தென் துருவத்தில் இறக்குவதற்க்கான பணியை நிறைவு செய்வோம். இஸ்ரோ விஞ்ஞானிகளிளின் கடுமையான கடும் உழைப்பில் தான் இது சாத்தியமானது என்று சிவன் தெரிவித்தார்.