நீயா பேசியது என் அன்பே! ஷாக்சியை பார்த்து கவின் பாடும் பாட்டு! கடுப்பில் பார்வையாளர்கள்

போன வாரம் பார்வையாளர்களை கதறவிட்டது போதாது என்று மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்துள்ளார் பிக் பாஸ். பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வனிதா வெளியேறிய பிறகு ரொம்பவே போர் அடிக்கிறது என்று பார்வையாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் கடந்த வாரம் இந்த கவின், லாஸ்லியா, சாக்ஷியையே மீண்டும் மீண்டும் காட்டி கடுப்பேற்றினார்கள்.

 

ஏதோ பிக் பாஸ் வீட்டில் அந்த 3 பேர் மட்டும் தான் இருப்பது போன்று நடந்து கொள்கிறார்கள்.கவின், சாக்ஷி, லாஸ்லியாவை தயவு செய்து மீண்டும் காட்டி எங்கள் உயிரை வாங்காதீர்கள் பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவில் கவின் சாக்ஷியை பார்த்து நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது என்று பாட அந்தம்மா வெட்கப்பட எங்களால் சத்தியமாக முடியல பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் கதறுகிறார்கள்.

காதல் லாஸ்லியா கடந்த வாரத்துடன் இந்த வீணாப் போன கவின், சாக்ஷி, லாஸ்லியா முக்கோண காதல் கதை முடிந்துவிட்டது என்று நினைத்தால் அதை தான் இந்த வாரமும் காட்டப் போகிறீர்களா என்று ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் பிக் பாஸை கெட்ட, கெட்ட வார்த்தையால் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். பார்வையாளர்களை கடுப்பேற்றி பார்ப்பதில் தான் இந்த பிக் பாஸுக்கு என்ன ஒரு சந்தோஷம்.


Leave a Reply