கல்லூரி நிர்வாகம் தலித் என்பதால், விளையாட அனுமதிக்காததால் மன உளைச்சலால் குத்துச்சண்டை வீராங்கனை தற்கொலை

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பொறியியல் படித்து வந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம்  மனு அளித்தனர்.

 

பூசாரிப்பாளையத்தை சேர்ந்த புவனேஷ்வரன் என்பவரின் மகள் யுரேகா (19) கடந்த 1ஆம் தேதி தற்கொலை செய்துக்கொண்டார். குத்துசண்டை போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்று வந்தவரை, விளையாட்டு ஆசிரியர் பாலமுருகன், முதல்வர் சிவக்குமார், துறை தலைவர் ராஜசங்கர், துறை ஆசிரியர் ஷாஜகான் ஆகியோர் தொடர்ந்து விளையாட அனுமதிக்காததுடன், மன உளைச்சல் அளித்து வந்ததாகவும், தலித் சமூகம் என்கிற காழ்ப்புணர்ச்சியில் நடந்துக்கொண்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.இச்சம்பவம் குறித்து கோவை வந்திருந்த முதலமைச்சரிடமும் ஏற்கனவே யுரேகாவின் பெற்றோர்கள் மனு அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply