விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனைக்கூட்டம்

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவையில் இந்து மக்கள் கட்சி மற்றும் அனுமன் சேனா அமைப்பின் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் கோவை சுந்தராபுரத்தில் நடைபெற்றது.கோவை சுந்தராபுரம் தனியார் ஹோட்டலில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அகில பாரத அனுமன் சேனா நிறுவனர் ஸ்ரீதரன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

வினாயகர் சதுர்த்தி விழா சிறப்புடன் நடைபெற அனைத்து உறுப்பினர்களும் சிறப்பான முறையில் களபணியாற்ற வேண்டும்.தொண்டர்கள் அனைவரும் ஜாதி, பேதமின்றி ஒற்றுமையுடன் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அனுமன் சேனாவின் பணிகளை எடுத்துரைத்து, பொதுமக்களின் நல்லாதரவுடன் சிறப்புடன் கொண்டாட சபதம் ஏற்க வேண்டும். மேலும்,தொண்டர்கள் அனைவருக்கும் விநாயகர் திருவுருவம் பொரித்த காப்புகள் கையில் கட்டப்பட்டது.

தமிழகத்தில் மழைபொழிந்து வளம் கொழிக்க வேண்டும் என்றும்,அனைத்து மக்களும் இன்புற்று வாழ அனைவரும் விநாயகப் பெருமானை தினமும் வழிபடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.இந்தவிழாவில் மாநில தலைவர் கோவிந்தராஜன், தேசிய செய்தி தொடர்பாளர் பத்மஜா முருகையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Leave a Reply