தமிழ்நாடு கபடி அமெச்சூர் கழகம் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி இன்று கோவையில் நடைபெறுகிறது.மாநில அளவிலான கபடிபோட்டி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இதில் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாரத் சூப்பர் லீக்கின் உறுப்பினர் ராஜீவ் சவுத்ரி,கோவை ஈரோடு,சேலம் நாமக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்பதாக அவர் கூறினார். 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இப்போட்டிகள் நடைபெறுவதாக கூறிய ராஜீவ் சவுத்ரி,இதன் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் 22ம் தேதி நடைபெறுவதாக கூறினார்.