கிரேக்க தலைநகர் ஏதென்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்து சாலைகளில் திரண்டனர்.நிலநடுக்கம் 5.1 மக்னிரியூட் ஆகப் பதிவாகியுள்ளதுடன், ஏதென்ஸின் வடமேற்கில் 22 கி.மீ (14 மைல்) தொலைவில் ஏற்பட்டது.இதன்போது, மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்புச் சேவை நகரப் பகுதிகளில் தடைப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நகரத்தின் மையப்பகுதியில் வலுவான அதிர்வை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கட்டிடங்களை விட்டு வெளியேறிய மக்கள் திறந்த வெளிகளில் கூடினர்.இதனிடையே, மின் தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து மின்தூக்கிகளில் சிக்கிய மக்களை தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.