ஆடை பட ரிலீசில் இருந்த சிக்கலை அமலாபால் தான் விடிய விடிய இருந்து நீக்கியுள்ளார்

Publish by: --- Photo :


ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நாயகியாக நடித்துள்ள படம் ஆடை. இப்படத்தை விஜி சுப்பிரமணி என்பவர் தயாரித்திருக்கிறார். இப்படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி காலைக்காட்சி மற்றும் மதியக்காட்சிகளில் படம் வெளியாகவில்லை.

 

மாலை ஆறு மணிக்குப் படம் வெளியானது. இந்தத் தாமதத்துக்குக் காரணம், படத்தின் தயாரிப்பாளர் ஏற்கெனவே தயாரித்த மதுரவீரன் படத்தில் ஏற்பட்ட இழப்பு உட்பட சில காரணங்களால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதாம்.

 

இந்த நேரத்தில் ஜூலை 18 இரவு முழுவதும் தயாரிப்பாளரின் சிக்கலைத் தீர்க்கும் முயற்சியில் நாயகி அமலாபால் உடனிருந்திருக்கிறார்.சிக்கல்களின் விவரம் அறிந்த அமலாபால் சுமார் நாற்பது இலட்சம் ரூபாய் கொடுத்து படம் வெளியாக உதவி செய்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்துக்காக அவருக்குப் பேசிய சம்பளத்தின் பெரும்பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. அதைக் கொடுத்து உதவி செய்திருக்கிறார்.

 

அதைவிட இரவு முழுவதும் தயாரிப்பாளரின் உடனிருந்த செய்தியால் அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள்.பெரிய நடிகர்களே தங்கள் பட வெளியீட்டின்போது கண்டுகொள்ளாமல் போய்விடும் காலகட்டத்தில் ஒரு நடிகை இரவு முழுக்க உடனிருந்து சிக்கலைத் தீர்க்க உதவியது கண்டு திரையுலகம் வியந்து பாராட்டி வருகிறது.


Leave a Reply