வெட்டுக் காயங்களுடன் கிடந்தவர் சாவு ! ஒருவன் கைது

Publish by: சஃபியுல்லா --- Photo :


திருப்பூர் மாவட்டம் அவிநாசி உட்கோட்டம் அவிநாசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாதம்பாளையம் பகுதியில் 17.07.2019 அன்று மாலை 7 மணி அளவில் கணபதி (30) என்பவர் உடலில் வெட்டுக் காயங்களுடன் கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை அவிநாசி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

 

ஆனால் கணபதி செல்லும் வழியில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கணபதியின் மனைவி ஜெயமணி (27) கொடுத்த புகாரின் பேரில் அவிநாசி காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

 

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ராபின் (25) என்பவரை விரைந்து கைது செய்து 19.07.2019 ஆம் தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்கள்.` இவ்வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்ததற்காக அவிநாசி காவல் நிலைய ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி பாராட்டினார்.


Leave a Reply