கைக்குழந்தையை கொன்று சடலத்தை மறைத்த கொடூரத் தந்தை

குடிபோதையில் தனது சொந்த மகளையே கொடூரத் தந்தை கொலை செய்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் எனுமிடத்தில் இத்துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. வியாழக்கிழமை இரவு குடிபோதையில் இருந்த நிலையில், கைக்குழந்தையான தனது ஒன்றரை வயது மகள் அழுதுகொண்டிருந்ததால் ஆத்திரமடைந்து தரையில் அடித்துக் கொலை செய்துள்ளார்.

 

பின்னர் வீட்டின் அருகில் இருந்த மிகப்பெரிய கல்லின் அடியில் குழந்தையின் சடலத்தை மறைந்துள்ளார். இந்நிலையில்,  வெள்ளிக்கிழமை காலை நகராட்சி ஊழியரால் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த கொடூரத் தந்தை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

 

ஏற்கனவே 5 மற்றும் 3 வயதில் இரு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், அவருடைய மனைவி தற்போது 4-ஆவதாக மற்றொரு பெண் குழந்தையை பிரசவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply