தொண்டி அருகே நம்புதாளையில் வாலிபரை கொலை செய்தவர்கள் கைது!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி அருகே நம்புதாளையில் கடந்த ஜூலை 14ம் தேதி மஞ்சகரிச்சான் கண்மாய்க்குள் வாலிபர் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்ததை தொண்டி காவல் நிலையத்தார் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து கொலை செய்தவர்களை தேடி வந்தனர்.விசாரணையில் கொலையுண்ட நபர் முகிழ்தகம், முத்தமிழ்நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் அஜீத்குமார் (22), என்பது தெரிய வந்தது.

 

அதன் பிறகு பிணக்கூறு ஆய்விற்காக ராமநாதபுரம் மருத்துவமனையில் அஜீத்குமார் உடலை வைத்திருந்த போது இவரது உறவினர்கள் இது ஆணவக் கொலை எனறும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். திருவாடானை டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இது குறித்து காவல் நிலையத்தார் பல்வேறு கோணங்களில் விசாரித்து தலைமறைவான நைனாமுகம்மது(22), மற்றும் திருத்துறைபூண்யைச் சேர்ந்த ராஜகுரு(21) இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து தங்க செயினை கைப்பற்றி குற்வாளிகளை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். கொலை குறித்து குற்றவாளிகள் கூறுகையில் நகைக்காக கொலை செய்த்தாக வாக்கு மூலம் கொடுத்ததாக தெரிவித்த்தாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தது.


Leave a Reply