பெண் போலீஸ் அதிகாரி வீட்டில் கஞ்சா! அவரை சஸ்பண்ட் செய்த கமிஷ்னர்

பெண் போலீஸ் புவனேஸ்வரி வீட்டில், கஞ்சா வியாபாரிக்கு என்ன வேலை.வீட்டிலேயே ஒரு கஞ்சா வியாபாரியை பதுக்கி வைத்ததால்தான், பெண் போலீஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

 

திருச்சி போதை பொருள் தடுப்புப்பிரிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் புவனேஸ்வரி. இவர் திருச்சி பீமநகரில் போலீஸ் அதிகாரிகள் குடியிருப்பில் தங்கி இருந்தார்.இவருடைய வீட்டில் கஞ்சா வியாபாரி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

அதனால் அவருடைய வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தங்கி இருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பதும், அவருடைய தம்பி ஏற்கனவே கஞ்சா வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியால் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.மேலும்அவருடைய வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் சோதனை நடத்தினார்கள்.

பின்னர் இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியை போதைப்பொருள் தடுப்புப்பிரிவில் இருந்து திருச்சி மாநகரத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

 

இந்நிலையில் மாநகரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவரை கமிஷனர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டு விட்டார். மேலும் தங்கி இருக்கும் போலீஸ் அதிகாரிகள் குடியிருப்பையும் காலி செய்ய புவனேஸ்வரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply