மத்தவங்க ஃபீலிங்ஸுடன் விளையாடுவது தப்பு கவின் : லாஸ்லியா

Publish by: --- Photo :


கவினும், லாஸ்லியாவும் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து செல்லும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் கவினை வைத்து பெரிய அளவில் காதல் டிராமா போடுகிறார்கள். கவினுக்கு காதல் அடிக்கடி வருவதும் போவதுமாக உள்ளது.

 

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு 2 நாளைக்கு ஒரு காதல் வருகிறது என்று வனிதா விஜயகுமார் கூட தெரிவித்தார்.இந்நிலையில் தான் காதல் முறிவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. லாஸ்லியா கவின் ப்ரொமோ வீடியோவில் நீ பண்ணது தப்பு கவின் பெரிய தப்பு, மத்தவங்க ஃபீலிங்ஸுடன் விளையாடுவது தப்பு.நீ என்னுடன் கதைப்பது கூட நடிக்கிறது மாதிரி இருக்கு.

எல்லாம் என்னால் நடந்தது போன்று இருக்கு, பைத்தியக்காரி மாதிரி நான் நடந்திருக்கிறேன் என்று லாஸ்லியா கூறுகிறார். அதை கேட்டு ஐ ஆம் டன் என்று கவின் சொல்ல லாஸ்லியாவோ மீ டூ என்று சொல்லிவிட்டு கிளம்பிச் செல்கிறார்.


Leave a Reply