10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு

Publish by: --- Photo :


தமிழக பள்ளி மாணவர்களுக்கு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி, 12ம் வகுப்பு தேர்வுகள் 2020ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. 11ம் வகுப்புதேர்வுகள் 2020ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதியுடன் முடிவடைகிறது.

அதேபோன்று 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்வு முடிவுகள் 12ம் வகுப்பிற்கு ஏப்ரல் 24ம் தேதியும், 11ம் வகுப்பிற்கு மே 14ம் தேதியும், 10ம் வகுப்பிற்கு மே மாதம் 4ம் தேதிவெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply