பெண்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் 7 செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளது

பெண்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், பயன்பாட்டாளர்களின் தகவல்களை திருடும் வகையிலும் இருந்து 7 செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளது.’குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தொலைந்த செல்போனை கண்டுபிடித்தல்’ ஆகியவற்றி பயன்படும் என்ற பெயரில் போலியான செயலிகள் பல ஆன்லைனில் உள்ளன. அந்த வகையில் ப்ளே ஸ்டோரில் இருந்த 7 ஆபத்தான செயலிகள் நீக்கப்பட்டுள்ளன.

 

இந்த செயலிகள் பயன்பாட்டாளர்களின் இருப்பிடம், அவர்களது தொடர்புகள், குறுச்செய்திகள், யாரிடம் போன் பேசியுள்ளார்கள் ஆகிய தகவல்களை திருடுகின்றன.அத்துடன் இந்த செயலிகள் மூலம் திருடப்படும் பெண்களின் தகவல்கள், பாலுறவு தேடும் செயலிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இதனைக் கண்டறிந்த ‘அவாஸ்ட்’ எனும் ஆண்டி-வைரஸ் செயலி நிறுவனம் இதுதொடர்பான கூகுளுக்கு தகவல் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் கூகுள் ஆபத்தான 7 செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இந்த 7 செயலிகளிலும் ரஷ்யாவை சேர்ந்த செயலி தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.


Leave a Reply