மிட்டாய் தருவதாக அழைத்து சென்று 59 மாணவிகளிடம் சில்மிஷம்

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பட்டாம்பி திருத்தலா சேர்ந்தவர் கிரிஷ்ணன். இவருக்கு வயது 57. இவர் அங்குள்ள ஒரு அரசு பள்ளி அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு பள்ளி மாணவ, மாணவியர் தினமும் மிட்டாய் வாங்க வருவது வழக்கமாகி உள்ளது.இந்த மாணவிகளை கிருஷ்ணன் கடைக்குள். ஏதோ ஒரு காரணம் கூறி அழைத்து சென்று மிரட்டி சில்மிஷத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். இதில் குறிப்பாக 6, 7-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவிகளை அதிகமாக சீரழிக்கப்பட்டு உள்ளனர்.

 

இந்த சம்பவத்தை ஒரு மாணவி வகுப்பு தன் பள்ளி ஆசிரியையிடம் கதறிய படி நடந்ததை கூறியுள்ளார். இதுகுறித்து அந்த ஆசிரியை குழந்தைகள நல அமைப்பிடம் புகார் செய்துள்ளார்.குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரித்தபோது, கடந்த 2 வருடமாக கிருஷ்ணன் 59 மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு தொல்லை செய்து வந்தது தெரியவந்தது. பின்னர், இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கேரளாவில் கடந்த 2 வருடங்களாக 59 பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பெட்டிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்போது, இந்த விவகாரம் பாலக்காடு பகுதியில் பூதாகரமாக வெடித்தது.இதனையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார்பெட்டிக்கடைக்காரர் கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply