சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை!

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில்
லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள காந்திபுரம் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தொடர்ச்சியாக புகார் வந்த வண்ணம் இருந்துள்ளது.

 

ந்த நிலையில் நேற்று மாலை சார்பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.இந்த அதிரடி சோதனையில் 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள காந்திபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகளவில் லஞ்சப்பணம் புழங்குவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.மாலை தொடங்கிய சோதனை தொடர்ந்து இரவு வரை தொடர்ந்தது.

 

மேலும்,இது தொடர்பாக சார் பதிவாளர் அம்சவேணி மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்டோரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

லஞ்ச ஒழிப்புத்துறையினர் கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நேற்று நடத்திய சோதனை சார்பதிவாளர் அலுவலக வட்டாரங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply