திருப்பூர் போலீஸ் கமிஷனா் அலுவலம் அருகே கள்ள லாட்டரி விற்பனை அமோகம்!!பரிசு போதையில் வருவாயை இழக்கும் கூலி தொழிலாளர்கள்!!

திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 3 நம்பர் லாட்டரி சூதாட்டம் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

3 நம்பர் லாட்டரி விற்பனை திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறிப்பாக பனியன் கம்பெனிகள் சார்ந்த பகுதிகளில் இந்த சூதாட்டம் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. சுமார் 100 முதல் 2000 ரூபாய் வரை பணம் கொடுத்து பரிசுக்கான நான்கு இலக்க எண்ணை சூதாடுவோர் தாங்களே தேர்வு செய்து கொள்ள ஏற்பாடு உள்ளது.

 

இதில் நான்கு எண்களை ஒரு துண்டு சீட்டில் எழுதி குலுக்கல் நேரம், வரிசை எண் குறிப்பிட்டு அதில் கையெழுத்திட்டு வழங்குகின்றனர். குறிப்பாக திருப்பூா் மாநகர போலீஸ் கமிஷனா் அலுவலத்தில் இருந்து எட்டிப்பாா்க்கும் தொலைவில் உள்ள் 15,வேலம்பாளையம் காவல் நிலையத்துக்குட்பட்ட திருவள்ளுவா் நகர் மாதேஸ்வரர் கோவில் அருகே கள்ள லாட்டரி சீட்டு விற்பனை பட்டையைக் கிளப்புகிறது. அதேபோல்  நெசவாளர் காலனி பஸ்டாப், தாராபுரம் ரோடு பழைய பஸ் ஸடாண்டு, யூனியன் மில் ரோடு, காங்கேயம் ரோடு, ஊத்துக்குளி ரோடு கூலிபாளையம் நால் ரோடு, சார்காகர் பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒளிவுமறைவு  இன்றி, பகல் நேரத்தில் இந்த கள்ள லாட்டரி சீட்டு, சூதாட்டம்  அமோகமாக நடக்கிறது.

 

இது ஒருபுறம் இருக்க கேரள மாநில லாட்டரிகளின் விற்பனை  மாநகரின் பெரும்பாலான இடங்களில்  தொழிலாளர்கள் அதிகளவில் ஒன்று கூடும் பகுதிகளிலும் விற்பனை களை கட்டியுள்ளது  மாலை 3.15 மணிக்கு குலுக்கல் ரிசல்ட் ஆன்லைன் மூலம் வெளியான உடன் விற்பனையாளரை மொபைல் போனில் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் பார்களில் வைத்து பரிசுத்தொகை உடனடியாக பட்டுவாடா செய்யப்படுவதாக கூறப்படுகிறது மேலும்  போலீசாரின் மாமூல் கவனிப்பின் அடிப்படையில் களைகட்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்,

 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நெம்பர் லாட்டரி ரிசல்ட் அறிவிப்புகள் வெளியிடப்படும் எண்களை கூறும் போது பனியன் பீஸ் நெம்பர் போன்று அடைமொழி வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். இது போன்ற சூதாட்டத்தை காவல் துறையினர் தடுக்க வேண்டும். அவ்வப்போது பெயரளவில் ஒன்றிரண்டு நபர்களை கைது செய்வதும், வழக்குப் பதிவு செய்து பின்னர் அவர்களை சொந்த ஜாமீனில் விடுவிப்பதும் என  கண்துடைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதை விட்டுவிட்டு,  இதை முற்றிலும் தடை செய்ய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே போன்று கேரள மாநில லாட்டரி விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும். அதேபோன்று லாட்டரி விற்பனைக்கு உறுதுணையாக செயல்பட்டு கல்லா கட்டும் காக்கிகள் மீதும் மாகநர போலீஸ் கமிஷனர் கடுமையான நடவடிக்கை  எடுக்கவேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.


Leave a Reply