13 வயது சிறுவனுடன் தகாத உறவு ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை!

13 வயது மாணவருடன் உடலுறவு வைத்த பள்ளி ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் பிரிட்டானி சமோரா. இவர் அந்த பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவர் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இது சில நாட்களுக்கு முன்பு தெரியவந்ததுள்ளது. ஆசிரியை அந்த மாணவருக்கு குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் கிடைத்துள்ளது, இது விசாரணையில் முக்கிய ஆதரமாக சிக்கியது.

 

மேலும், பள்ளி வகுப்பறையிலேயே அவர் அந்த சிறுவனுடன் உடலுறவில் ஈடுபட்டு வந்து உள்ளார் என்றும் தெரியவந்தது. எனவே, இவரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களாகவே இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், சமோராவுக்கு 20 வருட சிறைத்தண்டனை அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இது கேட்டு சமோரா கதறி அழுதார். அவரது உறவினர்களும் அழுதனர். அமெரிக்க சட்டப்படி சிறுவனுடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply