காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

உலகமெங்கும் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாள் விழா ஜூலை 15ம் தேதி கொண்டாடபட்டு வரும் நிலையில், கோவையிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கர்மவீரர் காமராஜரின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு, உலகமெங்கும் அவரின் பிறந்த நாள் விழாவை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை வடகோவை மேம்பாலம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் காலை முதலே மாலைகள் அணிவித்து, அவரின் சிலைக்கு மரியாதை செய்யப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடபட்டு வருகிறது.

இதில் ஒரு பகுதியாக பேருர்,தீத்தி பாளையம் மற்றும் காளம்பாளையம், ஊர் பொதுமக்களின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பேருரை சேர்ந்த ஜெகன் கூறுகையில்,கர்மவீரர் காமராஜரின் ஆட்சி என்பது இன்றளவும் நாடே போற்றும் நல்லாட்சியாக திகழ்ந்ததாகவும், அவரது ஆட்சியில் பல நல்ல திட்டங்களை தந்ததாகவும் அப்படி ஒரு திட்டம் தான் சத்துணவு திட்டம் எனவும் அவரது ஆட்சி காலத்தில் தான் பல அணைகள் கட்டப்பட்டதாகவும் இன்னும் பல நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு தந்த தென்னாட்டு சிங்கம் தான் இந்த காமராஜர் எனவும் அவர் கூறினார்.

இவர் ஆண்ட ஒரு பொண்ணான ஆட்சி மீண்டும் வருமா என ஏக்கம் இன்றளவும் நம் அனைவரின் கண்களிலும் இருந்து கொண்டே தான் இருக்கிறது , எனவும் அப்படி ஒரு நல்லாட்சியை வழங்கிய கர்மவீரர் காமராஜரின் 117வது பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்துவது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தலையாய கடமை, அப்பேற்பட்ட கடமையை ஊர்மக்கள் சார்பில் செலுத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆர், ராமராஜ்,துரைசாமி, முத்துராஜ், முருகேஷ் குமார், மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply