இராமநாதபுரத்தில் சென்ட்ரல் ராம் நாடு ஹோமர் கிளப் சார்பில் புறா பந்தயங்களில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

சென்ட்ரல் ராம் நாடு ஹோமர் கிளப் சார்பில் இரண்டாம் ஆண்டு புறா பந்தயம் ஜனவரி 3, 27, பிப்ரவரி 10, 24, மார்ச் 25 ல் நடந்தது. சார்ட் சாம்பியன் பந்தயத்தில் அச்சுந்தன்வயல் ரவி, லாங் சாம்பியன் பந்தயத்தில் கே.முனியசாமி புறாக்கள் சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றன.விழுப்புரம் முதல் இராமநாதபுரம் 295 கிமீ., தூர புறா பந்தயத்தில் எம்.சந்திரன் என்பவரது புறா 4 மணி நேரம் 36 நிமிடம் 43 விநாடியில் கடந்து முதல் பரிசை தட்டிச் சென்றது.

 

இராமநாதபுரம் நிஜந்தா கண்ணன் என்பவரது புறா 4 மணி நேரம் 39 நிமிடம் 43 விநாடியில் கடந்து இரண்டாம் பரிசு பெற்றது.இராமநாதபுரம் ராஜா என்பவரது புறா 4 மணி நேரம் 41 நிமிடம் 44 விநாடியில் கடந்து மூன்றாம் பரிசு பெற்றது.நான்காம் பரிசு ராஜா, ஐந்தாம் பரிசு அருள்தாஸ், ஆறாம் பரிசு தமீம் சுல்தான் புறாக்கள் பரிசு வென்றன. ராமநாதபுரம் ராஜா குமரன் சேதுபதி பரிசு வழங்கி பாராட்டினார்.

தாம்பரம் முதல் இராமநாதபுரம் 438 கிமீ., தூர புறா பந்தயத்தில் இராமநாதபுரம் நிஜந்தா கண்ணன் என்பவரது புறா 5 மணி நேரம் 17 நிமிடம் 39 விநாடியில் கடந்து முதல் பரிசை தட்டிச் சென்றது. இராமநாதபுரம் ராஜா என்பவரது புறா 5 மணி நேரம் 18 நிமிடம் 11 விநாடியில் கடந்து இரண்டாம் பரிசு பெற்றது.இராமநாதபுரம் நிஜந்தா கண்ணன் என்பவரது புறா 5 மணி நேரம் 18 நிமிடம் 35 விநாடியில் கடந்து மூன்றாம் பரிசு பெற்றது.

 

நான்காம் பரிசு ராஜா, ஐந்தாம் பரிசு எம்.பாலமுருகன், ஆறாம் பரிசு நிஜந்தா கண்ணன், ஏழாம் பரிசு ரவி புறாக்களுக்கு கிடைத்தன.சென்னை ஆர்.ஆர்.பிரசாத் பரிசு வழங்கி கவுரவித்தார்.ஆந்திர மாநிலம் நெல்லூர் முதல் இராமநாதபுரம் வரை 580 கி.மீ., தூர பந்தயத்தில் இராமநாதபுரம் அச்சுந்தன்வயல் ரவி என்பவரது புறா 9 மணி நேரம் 18 நிமிடம் 1 நொடியில் கடந்து முதல் பரிசு, வென்றது. இரண்டாம், மூன்றாம் பரிசுகளை அச்சுந்தன்வயல் ரவி புறாக்களே தட்டிச் சென்றன. நான்காம் பரிசு முனியசாமி, ஐந்தாம் பரிசு ரவி, ஆறாம் பரிசு எம்.பாலமுருகன், ஏழாவது பரிசு பி.ஜெகதீசன், எட்டாவது பரிசு பி.ரவி புறாக்களுக்கு கிடைத்தன.

இராமேஸ்வரம் ஜனனி முருகன் பரிசு வழங்கினார். 500 கி.மீ., தூர நாயுடு பேட்டை புறா பந்தயத்தில் கீழக்கரை கண்ணன் என்பவரது புறா 8 மணி நேரம் 40 நிமிடம் 05 விநாடியில் கடந்து முதல் பரிசு வென்றது. இராமநாதபுரம் அச்சுந்தன்வயல் ரவி என்பவரது புறா 9 மணி நேரம் 40 நிமிடம் O2 நொடியில் கடந்து இரண்டாம் பரிசு, வென்றது. இராமநாதபுரம் அச்சுந்தன்வயல் எம்.பாலமுருகன் என்பவரது புறா 14 மணி நேரம் 30 நிமிடம் 36 நொடியில் கடந்து மூன்றாம் பரிசு, வென்றது. நான்காம் பரிசும் எம்.பாலமுருகன் புறாவுக்கு கிடைத்தது.

திருச்சி ஜெகதீசன் பரிசு வழங்கினார். 1000 கி.மீ., தூர நாயுடு பேட்டை புறா பந்தயத்தில் ரெகுநாதபுரம் கே.முனியசாமி என்பவரது புறா 30 மணி நேரம் 06 நிமிடத்தில் கடந்து முதல் பரிசு வென்றது. இரண்டாம் பரிசையும் ரெகுநாதபுரம் கே.முனியசாமி புறா 74 மணி நேரம் 23 நிமிடத்தில் கடந்து வென்றது. மதுரை வில்பிரட் பரிசு வழங்கினார். பந்தய ஏற்பாடுகளை சென்ட்ரல் ராம்நாடு ஹோமர் கிளப் நிறுவனத் தலைவர் ஆனந்தமோகன், செயலாளர் ஜெகதீசன், ஆண்டாள் பேக்கரி மாஸ்டர் யாசின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .


Leave a Reply