போபால்: 25 வயது இளைஞரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, பாஜக தலைவர் ஒருவர் மீது பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையின் பாஜக டிவிஷனல் செயலாளராக பதவி வகித்தவர் 55 வயதாகும், பிரதீப் ஜோஷி. ஆளுக்கு வயதாகியுள்ளதே தவிர, விவஸ்தை இல்லை என்று தெரிகிறது. 25 வயதாகும் ஒரு இளைஞரிடம் ஓரினச்சேர்க்கை உறவுக்கு முயன்றுள்ளார் இந்த பிரதீப் ஜோஷி.ஆபாச படங்களை அனுப்பி, ஆபாச மெசேஜ்களையும் அனுப்பி இளைஞருக்கு பாலியல் சீண்டல் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பான சாட்டிங் விவரங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, அவரை கட்சி பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது பாஜக. ஆனால், இதை சும்மாவிடுவதாக இல்லை காங்கிரஸ். மத்திய பிரதேச காங்கிரஸ் செயலாளர் ராகேஷ் சிங் யாதவ் “பாலியல் சுரண்டல்” என்று குறிப்பிட்டு குற்றம்சாட்டியுள்ளார். என்ன இப்படி ஆரம்பிச்சிட்டீங்க.கடந்த 20 நாட்களிலிருந்து ஜோஷி அந்த நபருடன் சாட்டிங்கில் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார். இப்போது, அந்த வாலிபர் தனது பாதுகாப்புக்கு அஞ்சி தலைமறைவாகிவிட்டார்.
இதற்கிடையில், மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் உமேஷ் சர்மா காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை அரசியல் நோக்கம் கொண்டதாகக் குறிப்பிட்டார், மேலும் இந்த விஷயம் பகிரங்கமான பின்னர் ஜோஷி தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.உஜ்ஜைன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சச்சின் அதுல்கர், கூறுகையில், பாலியல் சுரண்டல் பற்றியோ அல்லது வாலிபர் காணாமல் போனதாகவும், எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. இந்த சம்பவம் குறித்து ஊடக செய்திகள் மூலமே தெரிந்து கொண்டோம் என்றார்.