அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒருவர் கொலை

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தலையில் கல்லை போட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டது பற்றி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.கேளம்பாக்கம் மார்க்கெட் பகுதியில் மூட்டை தூக்கும் தொழில் செய்து வந்த அருள் என்பவர் கேளம்பாக்கம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தலையில் பெரிய கல்லை போட்டு கொலை செய்யப்பட்டதால் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். இது தொடர்பாக அவருடன் பணி புரியும் சக தொழிலாளர் இருவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். போதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? வேறு எதேனும் முன் விரோதம் காரணமா? என விசாரணை நடைபெற்று வருகிறது.


Leave a Reply