மது பிரியர்களின் கூடாரமாக மாறியது ! இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் !! மாவட்ட ஆட்சியர் திகைத்து போனார் !!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று காலை இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற இருந்தது இந்நிலையில் அங்கு வந்த ஆட்சியர் மரக்கன்று நடும் இடத்திற்கு சென்ற போது அதன் அருகிலும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தாறுமாறாக ஆங்காங்கே குப்பை கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் மேலும், மது பாட்டில்கள் மலை போல் குவிந்து கிடக்கும் காட்சிகள் ஆட்சியரை திகைக்க வைத்தது இதனால் அங்கு கூடியிருந்த அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்களையும் டோஸ் விட்டார்.

இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பிறகு மரக்கன்று நடுதல் மற்றும் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில் மருத்துவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். அனைத்து ஊராட்சிகளுக்கும் முன் மாதிரியாக திகழ வேண்டிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்த நிலையென்றால் இவர்கள் லட்சணம் எவ்வாறு இருக்கும்.

இவர்கள் எல்லாம் எப்படி தூய்மை இந்தியா திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பார்கள் என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்விக்கணை எழுப்பியுள்ளனர்.


Leave a Reply