அத்திவரதரை பார்த்த பக்தர்களை அசிங்கமான வார்த்தையில் அர்ச்சித்த போலீஸ் அதிகாரி

சென்ற 9.7.2019 அன்று அதிகாலை 5.40 மணிக்கு அத்திவரதரை தரிசித்து விட்டு வெளியே வந்தபோது கிழக்கு கோபுர வாயில் வழியாக காலனிகளை எடுக்க சென்றபோது, அங்கிருந்த காவல் துறை அதிகாரி (டி.எஸ்.பி) வரிசையில் நின்றிருந்த பக்தர்களையும், காலணிகளை தேடி திரிந்து கொண்டிருந்த பக்தர்களையும் மிகவும் கேவலமாக..

 

மாடு… நாய்…. சோறு தான் திங்கிறியா?…. போன்ற அருவருக்கத் தகுந்த வார்த்தையில் அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்.

 

அதுவும் தனது சுமோ வாகனத்தில் உள்ள மைக்கில் பொதுவெளியில் பேசிக் கொண்டிருந்தது பக்தர்களின் மத்தியில் மிகுந்த மன வேதனையை தருவதாக அமைந்தது.

 

இதுகுறித்து அந்தச் சூழ்நிலையை ஆராயும் போது..

 

அத்தி வரதர் கோயிலில் உள்ள நான்கு வழிகளிலும் ஒரே மாதிரியான வரவேற்பு அமைப்புகள் அமைக்கப்பட்டிருந்ததும்,

 

எந்த கோபுர வாயிலில் இருக்கிறோம் என்பதே தெரியாத மாதிரி வாயிலின் பெயரை துல்லியமாக எழுதப்படாமல் இருந்ததாலும்

 

எந்த வாயில் வழியாக அத்திவரதரை தரிசித்தோம்.. எந்த வாயில் வழியாக வெளியே வந்தோம், எந்த வாயிலில் காலனிகளை விட்டுள்ளோம் என்பதில் மிகுந்த குழப்பம் நிலவியதால், பக்தர்கள் கோயிலின் நான்கு கோபுர வாயிலையும் சுற்றிவர நேர்ந்தது.

அவ்வாறு வந்தவர்கள் சாலையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தனர். மேலும் தங்களுடன் வந்தவர்கள் எந்த வாயிலில் உள்ளனர் என்பதை அறியமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர் பக்தர்கள்,

 

இவ்வாறு அவதிப்பட்டுக் கொண்டிருந்த பக்தர்களைதான் மேற்கண்டநேரத்தில் பணியிலிருந்த டி.எஸ்.பி. அர்சனை செய்து கொண்டிருந்தது மிகுந்த வேதனையை தந்தது.

 

இதுபோன்ற விஷேசநிகழ்வு நடைபெறும்போதும், மக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்புக்காக நிறுத்தப்படும் காவலர்களை, சுய கட்டுப்பாடுடன் இருக்குமாறு மேலதிகாரிகள் பார்த்துக் கொள்ளவேண்டும்.

 

இந்த நிகழ்வில் காலனி விடுவதற்கு தகுந்த ஏற்பாடு செய்யவில்லை, எந்த வாயிலில் இருக்கிறோம் என்பதை தெளிவாக வழிகாட்டிப் பலகையும் வைக்கவில்லை, கோவிலைச் சுற்றி வாகனப்போக்குவரத்தை தடை செய்யவில்லை…

 

இதுபோன்ற நிர்வாக அவலங்களால் பக்தர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

 

வி.ஐ.பி. தரிசனம் செய்ய வந்தவர்களுக்கு தந்த முக்கியத்துவத்தை குறைத்துவிட்டு..
பொதுதரிசனம் செய்யவந்த பக்தர்களுக்கு முக்கியத்துவம் தந்திருக்கவேண்டும்.

 

இறைவன் எப்போதும் பொதுமக்களுடன்தான் ஐக்கியமாக உலாவருவான்… அவன் சுகவாசிஅல்ல…

 

அந்தவகையில் அத்திவரதரை காண மக்களோடு மக்களாக கலந்து எத்தனையோ உண்மையான மகான்கள் வரிசையில் காத்திருந்திருக்கலாம்… அல்லது இறைவனே கூட மக்களோடு மக்களாக வந்து இந்த வைபவத்தில் கலந்திருக்கலாம்…

அக்காலத்தில் உயர்ஜாதியினர், தாழ்ந்த ஜாதியினர் என்ற பாகுபாட்டை ஒருசிலர் கோயில்களில் பார்த்தனர்…
ஆனாலும் இறைவன் அருள் செய்திருப்பது அனைத்தும் தாழ்ந்த ஜாதி என்று ஒதுக்கப்பட்ட மக்களுக்குத்தான், எந்த உயர் ஜாதிஎன்ற பிரிவுக்கு இறைவன் காட்சியளித்தது இல்லை.

 

ஒருபானை சோறுக்கு ஒரு சோறு பதாம் என்பதற்கு இணங்க..

 

தாழ்ந்த ஜாதி என்று ஒதுக்கப்பட்ட நந்தனாருக்காக நந்தியையே விலகியிருக்க செய்தார் சிவபெருமான்…

 

இதுபோன்றுதான் கால மாற்றத்தில், தற்போது பணம் இருப்பவர்களுக்கு முக்கியத்துவமும் பணம் இல்லாதவர்களுக்கு ஏனோதானோ என்றவகையிலும் இறைவனை வேறுபடுத்துகின்றனர்.

 

எனவேதான் இறைவன் வி.ஐ.பி.க்களுடன் சொகுசாக வரமாட்டான், பொதுமக்களுடன் பொது தரிசனத்தில்தான் வருவான் எனவே பொது தரிசனம் காண வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகமும், அரசுஅதிகாரிகளும், முக்கியத்துவம் தந்தாலே போதும்..

 

வீணான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி உண்மையான பக்தர்களின் சாபத்திற்கு ஆளாகிவிடாதீர்கள்.


Leave a Reply