இராமநாதபுரத்தில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

தமிழக சட்டப்பேரவையில் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அனைத்து கட்சிக் கூட்டத்தில் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவரான ஜான்பாண்டியன் பெயரை,திமுக, தலைவர் ஸ்டாலின் ஒருமையில் பேசியதாக கூறி த.ம.மு கழகம் சார்பில் இராமநாதபுரம் அரண்மனை நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் தில்லை சீமை ரஹ்மான் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் முனியசாமி, இளைஞரணி மாவட்ட தலைவர் வெங்கடேஷ் பாண்டியன், திருவாடானை ஒன்றிய செயலாளர் பார்த்திபன், திருப்புல்லாணி ஒன்றியச் செயலாளர் ஆறுமுகக் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply