எழுத்தாளர்கள் எளிமையான எழுத்து  நடையை பின்பற்றினால் வாசிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் கார்த்திகேயன் பேட்டி

எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் புத்தகத்தில் எளிமையான எழுத்து  நடையை பின்பற்றினால் வாசிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.கோவை மாநகராட்சியின் முன்னாள் ஆணையரும், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனருமான கார்த்திகேயன் எழுதிய “ஹார்ட் குவேக்” என்ற புத்தகம் வெளியீட்டு விழா  நடைபெற்றது. கோவையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஐ. ஏ.எஸ் அதிகாரி காயத்ரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

மருத்துவ த்ரில்லர் கதை பின்னணியை கொண்டு உருவாகியுள்ள இப்புத்தகத்தை கார்த்திகேயன் வெளியிட காயத்ரி கிருஷ்ணன் மற்றும் தனியார் வணிக வளாகத்தின் நிர்வாக இயக்குநர் அஸ்வின் ஆகியோர் பெற்றுகொண்டனர். இதை தொடர்ந்து பேசிய கார்த்திகேயன்,எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் புத்தகத்தில் எளிமையான எழுத்து  நடையை பின்பற்றினால் வாசிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், திறமையான எழுத்தாளர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் நல்ல களம் அமைத்து கொடுக்கப்படுகிறது என்று கூறினார்.


Leave a Reply