காரும் சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்து.காரில் வந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் பலி – இரண்டு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோலார்பட்டியில் ஆம்னி காரும்,சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் வந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் பலி – இரண்டு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சிவசக்தி காலனியை சேர்ந்தவர் சம்பத்குமார் (62).இவரது மனைவி பேபிகமலம் (55) பேபி கமலத்திற்கு காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக உடுமலைப்பேட்டையில் இருந்து வாடகை கார் மூலம் சம்பத்குமார் பேபிகமலம்,இவரது தங்கை ஜோதிமணி ஆகியோர் கோவையில் உள்ள மருத்துவமனை சென்று வந்து கொண்டிருந்தனர்.

 

அப்போது,தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சரக்கு ஆட்டோ மூலம் மாம்பழத்தை எடுத்துக் கொண்டு கேரளா மாநிலம் மங்களூரில் இறக்கிவிட்டு மீண்டும் இன்று பெரியகுளம் திரும்பிக்கொண்டிருந்த போது
பொள்ளாச்சி அடுத்த கோலார்பட்டி சுங்கம் அருகே வளைவான பகுதியில் முன்னே சென்ற வாகனத்தை முந்தி சென்ற போது கார் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் காரை ஓட்டி வந்த வேலுச்சாமி மற்றும் சம்பத்குமார் இவரது மனைவி பேபி கமலம் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பின்னர், சத்தத்தைக் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காரில் படுகாயத்துடன் இருந்த பேபி கமலத்தின் தங்கை ஜோதிமணி, சரக்கு ஆட்டோ டிரைவர் ஆனந்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர், பின்னர்,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோமங்கலம் காவல்துறையினர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த விபத்து காரணமாக பொள்ளாச்சி உடுமலை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கோலார்பட்டியில் ஆம்னி காரும்,சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் வந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply