அரசு பள்ளி ஆசிரியர் பள்ளியில் தற்கொலை முயற்சி!

சென்னை அடுத்த அனகாபுத்தூரில் கடன் கொடுத்த பிரச்சனையால் அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அனாக புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக கிருபானந்தன் என்பவர் உள்ளார். அதே பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் சங்க தலைவர் ஆகவும், அதிமுக நிர்வாகியாகவும் உள்ள முரளிதரண் என்பவர் வங்கியில் லோன் வாங்கி கொடுத்து கிருபானந்தனிடம் 5 லட்சம் ரூபாய் கடனாக பெற்று உள்ளார்.

 

வாங்கிய கடனை நீண்ட நாட்களாக முரளி தரணும் கொடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் முரளி தரண் வீட்டிற்கு சென்ற கிருபானந்தன் கடனை திரும்ப கேட்டுள்ளார். அப்போது முரளி தரண் தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த கிருபானந்தன் பள்ளிக்கு சென்று இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவரை காப்பாற்றிய சக ஆசிரியர்கள் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply