மழைநீரை சேமிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

நீர் மேலாண்மையில் பல்வேறு தொழில்நுட்பங்களை விட மழைநீரை சேமிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள இரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரத்தினம் குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் தலைமையில் நடைபெற்ற விழாவில் இஸ்ரோவின் முன்னால் இயக்குனரும் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் துணை தலைவரும் ஆன முனைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார்.

போட்டிகள் நிறைந்த உலகில் வாய்ப்புகளை உணர்ந்து மாணவர்கள் முனைப்புடன் செயல்படும்போது அவர்கள் பல சாதனைகளை புரிந்து அவர்கள் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது இந்தியாவை வல்லரசாக உருவாக்கவும் உதவும் என்றார்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அறிவியல் துறையில் நமது நாடு பல்வேறு துறையில் முன்னேற்றம் கண்டு வருவதாக குறிப்பிட்ட அவர்,விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை துறையில் புதிய தொழில் நுட்பங்கள் வருவது வரவேற்பதாக இருந்தாலும் இயற்கை சார்ந்து பணியாற்றுவதும் அவசியம் என்ற அவர் நீர் ஆதாரத்தில் மழைநீரை சேமிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.


Leave a Reply