நாட்டிலேயே முதன்முறையாக பிரத்யேக பாரம்பரிய நகைகள் வாங்குவதற்கான ஆன்லைன் வர்த்தக வெப்சைட் கோவையில் துவங்கப்பட்டது.கோவையில் நூறு வருடத்திற்கு மேலாக தங்க நகைகள் தயாரித்து மொத்த விற்பனை செய்து தனி முத்திரை பதித்து வரும் நிறுவனம் ஸ்ரீ அண்ணாமலையார் ஜுவல்லர்ஸ். ராஜ வம்சங்கள் உட்பட பல்வேறு சாமி சிலைகளுக்கு கலை நயம் மிக்க நகைகள் செய்வது உட்பட பாரம்பரிய நகைகள் செய்வதில் தனி முத்திரை பதித்து வரும் இந்நிறுவனத்தின் 100 வருடங்கள் நிறைவடைந்தை ஒட்டி தங்களது பாரம்பரிய நகை விற்பனை அனைவருக்கும் செல்லும் விதமாக புதிய வெப்சைட் துவக்க விழா கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
ஸ்ரீ அண்ணாமலையார் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இதில் கஸ்தூரி குழுமங்களின் தலைவர் விஜயகுமார் ஷா மற்றும் பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு புதிய வெப்சைட்டை துவக்கி வைத்தனர். இதில் பேசிய ஸ்ரீ அண்ணாமலையார் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் ஈஸ்வரன், நாட்டிலேயே முதன் முறையாக பாரம்பரிய நகைகள் வாங்குவதற்கான ஆன்லைன் வர்த்தக வெப்சைட் துவக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,தமிழர் கலாச்சார பாரம்பரியம் நகைகள் உட்பட பல்வேறு விதமான அரிய டிசைன்களை வடிமைப்பதில் மிக பழமையான நிறுவனமாக நாங்கள் செயல் பட்டு வருவதாகவும் ,இது போன்று பாரம்பரிய நகை வடிமைக்கும் பணிகளால் அதிக தங்க நகை தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுவதோடு, நலிவடைந்து வரும் தங்க நகை தொழில் மேலும் வளரும் என தெரிவித்தார்.