உயிர் நீரை சேமிப்போம் என்ற தலைப்பில் குறும்படம் மற்றும் ஓவியப்போட்டி.கலந்து கொண்டு அசத்திய மாணவர்கள் !!!

கோவையில் உயிர் நீரை சேமிப்போம் எனும் தலைப்பில் நடைபெற்ற குறும்படங்கள் மற்றும் ஓவிய போட்டிகளில் நீர் மேலாண்மை குறித்த பல்வேறு விதமான ஓவியங்கள் வரைந்து அசத்திய மாணவ,மாணவிகள்.கோவையில் ‘சிறுதுளி’ அமைப்பு, புரூக் பீல்ட்ஸ் இணைந்து, ‘உயிர் நீர்’ எனும் தலைப்பில், தண்ணீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கண்காட்சி, குறும்படம் மற்றும் ஓவியப்போட்டி, ‘புரூக் பீல்ட்ஸ்’ வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.

இதில் உயிர் நீரை சேமிப்போம் என்பதை மையப்படுத்தி, மழைநீரை சேகரிக்கும் முறை, மழைநீர், ரசாயணமற்ற சுத்திகரிப்பான் குறித்த கண்காட்சி மற்றும் மழைநீர் சேகரிப்பு நடைமுறைகளுக்கான தீர்வுகள் குறித்து வணிக வளாகத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.தொடர்ந்து நடைபெற்ற நீர் மேலாண்மை குறித்த குறும்பட போட்டி மற்றும் ஓவிய போட்டிகளில் சிறந்தவைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன் மற்றும் புரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தின் மேலாளர் சுஜாதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply