நான் பும்ராவை காதலிக்கவில்லை- அனுப்பமா பரமேஸ்வரன்

இந்திய கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் காதலிப்பதாக வதந்திகள், சர்ச்சைகள் வலம் வருவது வழக்கம் தான். அவற்றுள் சில உண்மையாகவும் மாறி இருக்கின்றன. அந்த வகையில் இந்திய அணியின் உள்ள பும்ராவும், தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் அறிமுகம் ஆகிய அனுப்பமா பரமேஷ்வரனும் காதலிப்பதாக சமூக ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகி இருந்தன. ஆரம்பத்தில் இந்த செய்தி வதந்தி என்று கூறப்பட்டாலும் சமூக வலை தளத்தில் இவர்கள் இருவரின் செயல்பாடுகள் நெட்டிசன் மத்தியில் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

 

இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ட்விட்டரில் பும்ரா ஃபாலோ செய்யும் ஒரே நடிகையாக அனுப்பமா மட்டுமே இருந்தார். இவரும் பும்ராவை ஃபாலோ செய்து வருகிறார். இதுமட்டுமல்ல, அவர் பதிவுகளை லைக் செய்வதும், ஷேர் செய்வதும் வாடிக்கையாக கொண்டு இருந்தார். அதே போல் பும்ராவும் அனுப்பாமவின் பதிவை கவனிக்க தவருவதில்லை. இது போதுமே விடுவார்களா நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட ஆரம்பித்தனர். இந்நிலையில் தற்போது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளித்துள்ளார் அனுப்பமா.

 

அதில் நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை என்றும், நாங்கள் எப்போதுமே நல்ல நண்பர்கள் என்று விளக்கம் அளித்துள்ளார். இதே போல் பும்ராவை மற்றொரு நடிகையான ராசி கண்ணாவுடன் சேர்த்தும் வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது அதற்கும் ராசி கண்ணா விளக்கம் அளித்துள்ளார். அதில் தனக்கு பும்ராவை ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக மட்டுமே தெரியும் என்றும், அதைத்தவிர தவிர தனக்கும், அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


Leave a Reply