பொள்ளாச்சி அருகே மண்ணுளிப் பாம்பு, நட்சத்திர ஆமை விற்ற ஐந்து பேர் கைது

பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அங்கலக்குறிச்சி பகுதியில் பிஏபி கால்வாய் அருகில் சிலர் மண்ணுளிப் பாம்பு நட்சத்திர ஆமை குளத்து ஆமை ஆகியவை விற்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் மாறுவேடத்தில் சென்று ஆமை வாங்குவது போல் அங்கு சென்றனர் அப்போது மண்ணுளிப் பாம்பு ஆமை விற்று வந்தவர்களை வனத்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சம்பத்குமார்,நந்தகுமார்,செல்லதுரை, அமிர்தராஜ், கண்ணன் இவர்கள் அங்கலக்குறிச்சி மற்றும் வால்பாறை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இதை எடுத்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் உத்தரவின்படி அவர்கள் ஐந்து பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 25ஆயிரம் ரூபாய் அவதாரம் விதிக்கப்பட்டது.


Leave a Reply