பாகிஸ்தான் அருகே நிலநடுக்கத்தினால் உருவான சிறிய தீவு கடலில் மூழ்கியுள்ளது.

பாகிஸ்தான் அருகே நிலநடுக்கத்தினால் உருவான சிறிய தீவு கடலில் மூழ்கி உள்ளது நாசாவின் செயற்கைகோள் படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. 2013 ஆம் ஆண்டு பாகிஸ்தான் துறைமுகத்திற்கு அருகே ஏற்பட்ட 7.7 ரிக்டர் நிலநடுக்கத்தில் 825 பேர் உயிரிழந்து உள்ளனர். கடலுக்கு அடியில் தட்டு நகர்ந்த போது திடீரென மண், பாறைகள் ஒரு வித வாயுவுடன் வெளியேறி ஒரு தீவாக உருவானது. அந்த தீவில் சேறு எரிமலை போல் பொங்கி வந்ததை பலரும் பார்த்து சென்றனர். வாயுவோடு எரிமலை உருவான போது அங்கிருந்த மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் செத்து கிடந்தன.

சேறு கொதிக்கும் இடத்தில் தீயை பற்றவைத்தால் அது வாயு வெளியேற்றத்திற்கு ஏற்ப குபுகுபுவென பற்றி எரிந்தது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் உருவான அந்த தீவு காலப்போக்கில் கடலில் மூழ்கி உள்ளது. செயற்கைகோள் புகைப்படங்களை காலத்திற்கு ஏற்ப ஒப்பிட்டு பார்க்கையில் தீவு இருந்த இடமே தெரியாமல் போய் உள்ளது. இது குறித்த புகைப்படங்களை நாசா வெளியிட்டு உள்ளது.


Leave a Reply