பேராசிரியை நிர்மலா தேவி நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து தியானம்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியர் நிர்மலாதேவி நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் வருகிற 22 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறாத நிர்மலா தேவி கண்களை மூடிக்கொண்டு அங்கேயே தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.

 

அருள்வாக்கு செல்வது போல் முணுமுணுத்த அவர் தனக்கு காலை 10 மணிக்கே தீர்ப்பு கிடைத்து தான் விடுதலை ஆகிவிட்டதாகவும், தனக்கு எதிராக குற்றம் சாட்டிய மாணவிகள் தூக்கு போட்டு இறந்துவிட்டதாகவும் கூறி அதிர வைத்தார். தனது முடிகளை தானே வெட்டி அதை காதில் சொருகி கொண்டு அவர் அமர்ந்து இருந்தார்.நீண்டநேரம் தியானத்தில் இருந்தவர் பின் அங்கிருந்து வெளியேறினார்.


Leave a Reply