பொள்ளாச்சியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – காதலன் உட்பட 9 பேரை கைது செய்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை. பொள்ளாச்சியில் மீண்டுமொரு அதிர்ச்சிகர சம்பவம் ?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அமானுல்லா. இவர் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக தெரிகிறது.அப்போது அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அமானுல்லா அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து அமானுல்லாவின் நண்பர்களுக்கு தெரியவர இதனைத் தொடர்ந்து அமானுல்லா தன் காதலியை நண்பர்களுக்கும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்த மிரட்டியுள்ளார்.

 

இதைத்தொடர்ந்து அமானுல்லா நண்பர்களும் அந்த பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் உட்படுத்தியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார்.இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேற்று பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதலிப்பதாக கூறி தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு மிரட்டி அவர்களது நண்பர்களுக்கும் பாலியல் வன்கொடுமையில் உட்படுத்தியதாக புகார் தெரிவித்தனர்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த மகளிர் காவலர்கள் காதலிப்பதாக கூறிய அமானுல்லாவை பிடித்து விசாரணை செய்தபோது, காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி வன்கொடுமையில் உட்படுத்தியது ஒத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து இதில் சம்பந்தபட்ட அமானுல்லா நண்பர்களான பகவதி, முகமதுஅலி, டேவிட்,செந்தில், முகமது ரபிக், அருண் நேரு, சையது முகமது, இர்ஷாத் முகமது, இர்ஷாத் பாட்சா ஆகிய 9 பேரை மகளிர் காவலர்கள் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.இதில் தலைமறைவாக உள்ள திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பிரபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு பொள்ளாச்சி டி.எஸ்.பி சிவக்குமார், வால்பாறை டி.எஸ்.பி விவேகானந்தன், குழந்தைகள் பாதுகாப்பு ஏ.டி.எஸ்.பி அனிதா ஆகியோரை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார் நியமித்து உள்ளார்.மேலும்,பாதிக்கபட்ட சிறுமியிடம் வாக்கு மூலம் பெறப்பட்டு ரகசியமாக அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதைக்கு உட்படுத்தபட்டு வருவதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

 

ஏற்கனவே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில்,அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் ஆதாரங்கள் குறித்து இதுவரை விடை தெரியாமல் இருந்து வரும் நிலையில் பொள்ளாச்சியில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட 9 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பொள்ளாச்சி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply