கோவை மாவட்டம் பொள்ளாச்சி மத்திய கயிறு வாரியம், கயிறு தொழில்முனைவோர் சங்கம் சார்பில் தூய்மை இந்தியா மாரத்தான் திட்டத்தின் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது.இப்போட்டி மகாலிங்கபுரம், ரவுண்டானா அருகில் உள்ள மத்திய கயிறு வாரிய மண்டல அலுவலகத்தில் தொடங்கி கோவை ரோடு,பல்லடம் சாலை வழியாக பி.ஏ கல்லூரியில் முடிவடைந்தது.
இந்த போட்டியை சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் துவக்கி வைத்தார்.
இப்போட்டி 10 வயதுக்கு கீழ் 19 வயதிற்கு கீழ் 19 வயதிற்கு மேல் என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு ஆண் பெண் என தனித்தனியாக நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு 2000 ரூபாய்,இரண்டாவது பரிசு1000 ரூபாய், மூன்றாம் பரிசு 500ரூபாய் என இரு பாலினத்திற்கும் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.