தமிழ் உள்பட 7 மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை படிக்க ஏற்பாடு

தமிழ் உள்பட 7 பிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மொழி மாற்றம் செய்து வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ரஞ்சன் தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்று கொண்டபோது உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் மக்களாலும் அவர்களது தாய் மொழியில் படிக்கபட வேண்டும் என தலைமை நீதிபதி வலியுறுத்தி இருந்தார்.

 

இந்நிலையில் ஹிந்தி, தெலுங்கு, அசாமி, மராத்தி, கன்னடா, ஒடியா ஆகிய ஆகிய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தமிழ் மொழியையும் இதில் சேர்க்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தமிழ் மொழியிலும் தீர்ப்பு வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


Leave a Reply