வனத்துறையினர் கண் முன்னே சிறுத்தை உயிரிழந்த காட்சி

கர்நாடகாவில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பொதுமக்கள் கற்களால் அடித்து கொன்ற பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. சித்திர துர்கா பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஊருக்குள் சிறுத்தை ஒன்று தண்ணீர் தேடி நுழைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயற்சித்த போது அங்கு கூடியிருந்த பொது மக்கள் மீது எதிர்பாராதவிதமாக சிறுத்தை பாய்ந்தது. இதனால் தங்களை தற்காத்து கொள்ள சிலர் கற்களை கொண்டு சிறுத்தையை தாக்கினர். பொது மக்கள் தாக்கியதில் காயம் அடைந்து கீழே விழுந்த சிறுத்தையை மேலும் பலர் கற்களை கொண்டு தாக்கினர். இதனால் வனத்துறையினரின் கண் முன்னே சிறுத்தை துடிதுடித்து உயிரிழந்தது.


Leave a Reply