ஓ‌பி‌எஸ் உள்ளிட்ட 11 எம்‌எல்‌ஏக்களை தகுதி நீக்கம் செய்யகோரிய வழக்கு இன்று மீண்டும் விசாரணை

Publish by: --- Photo :


தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்‌எல்‌ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்‌எல்‌ஏக்களை தகுதி நீக்கம் செய்யகோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 11 சட்ட பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சட்டபேரவை தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவித்து இருந்தது.

 

இந்த உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்செய்யப்பட்டது. இதே போல தினகரன் தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதால் தகுதி நீக்கம் செய்யபட்ட அதிமுக எம்‌எல்‌ஏக்களான வெற்றிவேல், பார்த்திபன், ரங்கசாமி, தங்க தமிழ்செல்வன் ஆகியோர் சார்பில் மேல்முறையீடு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.

 

இதனை அடுத்து திமுகவின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் இவ்வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்து உள்ளது.இதற்கிடையே 11 எம்‌எல்‌ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் சென்னை பாரிமலையில் உள்ள கந்தகோட்டம் கோவிலில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.


Leave a Reply