கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற ரயிலில் பயணி ஒருவர் மாரடைப்பால் உயிர் இழந்தார். நேற்று மாலை சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து கண்ணன் என்பவர் ஏறினார். இந்த நிலையில் ரயில் இன்று காலை ரயில் நிலையம் வந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கினர்.

 

ஆனால் கண்ணன் மட்டும் எழாமல் இருப்பதை கண்ட சக பயணிகள் அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் எழும்பாததால் சந்தேகம் அடைந்த சக பயணிகள் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து பார்த்த போது மதுரையில் இறங்க வேண்டிய கண்ணன் மாரடைப்பால் உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து கண்ணனின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்த அதிகாரிகள் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Leave a Reply