தமிழ் ஆங்கிலம் தவிர்த்து 3 வது மொழியை கற்பது மாணவர்களுக்கு சிரமம்

தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் அது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சட்ட பேரவையில் இன்று ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படும் என திமுக உறுப்பினர் சுரேஷ் ராஜன் கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தபட்டால் ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாறும் போது மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கலந்தாய்வு நடத்தப்பட்டால் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்படாது என்பதால் அரசு இந்த முடிவு எடுத்து செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

 

பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையில் அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்த அவர் தமிழ் , ஆங்கிலம் தவிர்த்து மூன்றாம் மொழியை கற்பது மாணவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் என்றார். இது குறித்து கடந்த மாதம் 26 ஆம் தேதி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளதாகவும் கூறினார்.


Leave a Reply